Friday, February 8, 2013

விஸ்வ(நாத) ரூபம்....!





'வாவ்....கமல்'  என்று கமலைப் பாராட்டத்தான் வேண்டும்...மூன்று வேறுபட்ட பாத்திரங்களில் - மூன்று விதமான நடிப்பினை...'ஒவர் ஆக்சன்' இல்லாமல்...'கமல் எனும் நடிகன்' நடிக்கிறான் என்ற எண்ணம் ஏற்படாமல்..இயல்பாய்ச் செய்திருப்பதற்கு... !

செல்வராகவனை வைத்து எடுப்பதாக இருந்து..பின்னர் அவர் 'பெரியவிசயம்' ஒத்துவராது என்று ஒதுங்கியபிறகு, தனியே தானே அந்தப் பொறுப்பை எடுத்து, Stylish--ஆக படத்தை எடுத்திருப்பதற்கும்...

பணப்பற்றாக்குறை காரணமாய் மூதலீட்டாளர் நிற்க..அதனையும் தன் பங்கிற்கு எடுத்ததற்கும்...

படம் ரீலிஸ் பண்ண அடுக்கடுக்காய் பல தடைகளைத் தாண்டி சரித்திரம் படைக்க வந்திருப்பதற்கும்...




'மன்மதன் அம்பு' பாயததற்கும் சேர்த்து..இந்த ரூபம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.
(டைட்டிலிலுக்கு அர்த்தம் கொடுக்கவே, ரூம் போட்டு யோசிச்சிருப்பார் போல)

துவக்கத்திலேயே கதை தொடங்கி..'டக்' என்று நிரூபமா மூலமாய், பிரச்னையைச் சொல்லி துவங்கிவிடுகிறது...

தெளிவாய்த் தொடங்கும் திரைக்கதை.. அடுத்த சிலபல நிமிடங்களிலேயே பரபரக்கிறது...விஸ்வநாத் விஸ்வரூபமெடுக்கும் வரை...

முதலில் வரும் 'ஸ்டண்ட்' காட்சியும் கமலுக்குப் புகழ்சேர்க்கும் என்பதில் ஐயமில்லை...

எடுத்த ரூபம் ஆப்கனை நோக்கி நகரும்போது..சற்றே பிரமிக்க வைத்து.. ஆப்கனில் நடக்கும் காட்சிகளும்..நிகழ்வுகளும் ஒரு போர்க்கள பூமியை கொண்டுவந்து நிறுத்தி, பதைபதைக்கச் செய்வதால்.. இளகிய மனதுடையவர்களுக்கு ..பதட்டத்தைத்தான் கொடுக்கும்...(குழந்தைகளுடன் பார்க்கச் செல்ல வேண்டாம்...) நமக்குப் பார்ப்பதற்கே இப்படி இருந்தால் நிஜத்தில் அங்கு வாழ்பவர்களை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...ம்ம்ம்..

சர்ச்சையில்லாமல் படம் வெளிவந்திருந்தால், இக் காட்சிகள் திரைக்கதையில் தொய்வினை உணரச்செய்திருக்கலாம்...மாறாக. 'இந்த இடத்தில்தான் நாம் கவனமாகப் பார்க்கவேண்டும்' என்ற எண்ணத்தினை தோற்றுவித்து விடுவதால்...அதுவும் பரபரப்பாகவே கடந்து விடுகிறது...

ஒருஒரு கேரக்டரிலிருந்து அடுத்த கேரக்டருக்கு கமல் பயணிக்கையில்..நளினமான விஸ்வநாத்-ஆக இருக்கட்டும்..இல்லை வலினமான 'விசாம்' ஆகாட்டும்...'ரா'  அதிகாரியாகட்டும்...எளிதாய்ப் பொருந்திப் போகிறோம்... 'விசாம்' கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார், மனிதர்...!

இடைவேளைக்குப் பிறகு..நிறைய காட்சிகள் 'இணையாக' காட்டப்படுவதால்..பொருத்திப் பார்ப்பது ...(என்னை மாதிரி) சாமன்ய ரசிகனுக்கு சற்றே கடினமாக இருக்கலாம்...!

இரண்டாம் பாகம் சற்றே நீளம் என்று இணைய விமர்சகர்கள் சொல்லியிருந்ததாய் ஞாபகம்...ஆனால், விறுவிறுப்பாய்த்தான் நகர்ந்தது...'எதையும் கட்' பண்ணிட்டாங்களோ என்னவோ?

நாயகின் காதல்..நாயகன்பால் வருவதனையும்..இயல்பாய்ச் சொல்லியிருப்பது ...cool!

சர்ச்சைக்குரிய விசயங்களைத் தேடிப்பார்த்தால் ..குத்திக் காட்டுவது போல் ஏதுமில்லைன்னுதான் தோணுது...

'தேவர் மகனில்' போங்கடா..பொண்டு பிள்ளைங்களை படிக்க வையுங்கடா'ன்னு சொல்ற மாதிரி..படிக்கவையுங்க..தீவிரவாதம் வேணாம்ங்கிற மாதிரி சிந்திக்கவைக்கிறமாதிரிதான் இருக்கிறது...'டாக்டருக்கு படிக்கணும்னு பையன் சொல்றதும்..அம்மா/அண்ணன் இங்கிலீஷ் பேசக் கத்துத்தர்றதும்...அம்மாவும், மகனும்..அந்த வெள்ளந்தியான வெளிப்பாடும்..உருக்குகிறது..

எழுத்தில் நிறைய இடத்தில் 'கமல்' தெரிகிறார்...'ஆனால் 'பாப்பாத்தியாம்மா, சிக்கன ருசிச்சு சொல்லுங்கோ'ன்னு சொல்றது ஓவர்...பசங்க சாப்பிட்டு கேட்டு பார்த்திருக்கேன்..மாமிமார் நிறைய பேர் 'அபசாரம்'னுதான் சொல்லக் கேள்வி... யாருடைய உணர்வையும் புண்படுத்தக் கூடாதுன்னா...இதுவும் மிகைதானே கமல்?...

நிருபமா கடவுளைப் பற்றி பேசுகையில், 'எந்தக் கடவுள்'னு கேட்கும் கமல்...'கடைசி குண்டுவெடிப்பைத் தடுக்கும் காட்சியில்..'தொழுகை' நடத்துவார்..லாஜிக் இடிக்கிறதே கமல்?

நிச்சயமாய் பெயர் சொல்லும் படம்தான்...ஆரோ சவுண்டில் பார்க்கவில்லை...அதிலும் ஒரு முறை பார்க்கவேண்டும்...!










4 comments:

ராஜ் said...

நல்ல விமர்சனம்...

DiaryAtoZ.com said...

படம் பார்க்க மேலும் ஆவலை தூண்டுகிறது.

Anonymous said...

Nice Review..Going to see tomorrow..
- Sree

சசி ராஜா said...

நன்றி ராஜ், இந்நேரம் படம் பார்த்தீருப்பீங்க..பிடித்ததா?

Post a Comment