Tuesday, December 28, 2010

“மன்மதன் அம்பு” – Good to See!

கமல் படம்….ரவிக்குமார் டைரக்ஷன்…காதல் களம்… வாவ்! என்ற ரொமாண்டிக் எதிர்பார்ப்புகளோடு பார்க்க வராதீர்கள்…‘காதலின் நடுவே சந்தேகம் வந்தால்’ – வேவு பார்த்தால்.. விளைகின்ற விளைவுதான் ‘மன்மதன் அம்பு’


கமல் காதலைத்தாண்டி எப்போதோ வந்தாயிற்று.. இன்னமும் அவரைக் காதல் இளவரசனாக பார்க்க அவருக்கும் விருப்பம் இருக்காது, பார்ப்பவர்களுக்கும் கூட. அதை உணர்ந்தே அவரது கதாபாத்திரமும் சித்தரிக்கப் பட்டு இருக்கிறது. So, cut that expectation and watch the movie, you like it!


படத்தின் முதல் பாகம் நன்றாகவே இருக்கிறது. சூர்யா-த்ரிஷாவின் பாடல் காட்சியோடு ஆரம்பமாகி, பிரச்னையை முதலிலேயே ஆரம்பித்து விடுகிறார். த்ரிஷாவின் நடிப்பும், பாவனையும் நன்றாகவே இருக்கின்றது, மற்ற விமர்சகர்களின் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன்..இவ்விசயத்தில்.

முதல் பாதியில், கமலின் வசனங்களும் சூப்பர்ப்! ‘நேர்மையானவங்களுக்கு திமிரு-தாங்க கேடயம்’ – மிக உண்மையான வார்த்தை. கமலின் matured thinking & seriousness was well exposed!



கமலின் நடிப்பு – மிக இயல்பு. அவருக்கு சர்டிபிகேட் தேவையில்லை. இன்னொரு ஆச்சரியம்…’ட்ரிம்’ கமல்!!! அவரது வயதிற்கும், மாதவனுக்கும் கம்பேர் பண்ணும்போது… கமலின் மெனெக்கெடலை ஆச்சரியப் படத்தோணுகின்றது..!!! அவரது சோலோ நடனமும் சூப்பர்ப்! ‘நீலவானம்’ பாடலும், காட்சியமைப்பும் ..’வாவ்’ போட வைக்கிறது! நீண்ட நாட்களுக்கும் பிறகு, கமலின் குரலில் ரசிக்கும்படியாய் ஒரு பாடல்….


செகண்ட் …ஃபுல் ஸ்கோர்.. சங்கீதாவிற்குதான்!. அவரது சொந்தக்குரலா? Well carried! Good show!

மாதவன்தான் படத்தின் முதுகெலும்பு.. ஆனால், சில சமயங்களில் சறுக்குகிறார். கமலின் குரலில் இருக்கின்ற சீரியஸ்நெஸ், மாதவன் உச்சரிப்பில் இல்லாமல் போகிறது..சிற்சில இடங்களில்! இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாம்! கிளைமாக்ஸ் காட்சிகளில், கூட இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம்.
காமிராவும், லோகேஷன்களும், கப்பலும் படத்தின் இன்னொரு சிறப்பு. இசை- துணைநிற்கிறது, ஆனால், பெரிதாய்ச் சொல்ல முடியாது.
முதல் பாதி – மிக நன்று. இரண்டாம் பாதி – கமர்சியலுக்காக, முதல் பாதியின் சீரியஸ்நெஸ்ஸைத் தொலைத்து, காமெடி டிராக்கிற்குத் தாவுவது கொஞ்சம் ஏமாற்றம்தான்…
மொத்தத்தில்….’Kind of feel good’ movie for the Holiday!