Tuesday, December 28, 2010

“மன்மதன் அம்பு” – Good to See!

கமல் படம்….ரவிக்குமார் டைரக்ஷன்…காதல் களம்… வாவ்! என்ற ரொமாண்டிக் எதிர்பார்ப்புகளோடு பார்க்க வராதீர்கள்…‘காதலின் நடுவே சந்தேகம் வந்தால்’ – வேவு பார்த்தால்.. விளைகின்ற விளைவுதான் ‘மன்மதன் அம்பு’


கமல் காதலைத்தாண்டி எப்போதோ வந்தாயிற்று.. இன்னமும் அவரைக் காதல் இளவரசனாக பார்க்க அவருக்கும் விருப்பம் இருக்காது, பார்ப்பவர்களுக்கும் கூட. அதை உணர்ந்தே அவரது கதாபாத்திரமும் சித்தரிக்கப் பட்டு இருக்கிறது. So, cut that expectation and watch the movie, you like it!


படத்தின் முதல் பாகம் நன்றாகவே இருக்கிறது. சூர்யா-த்ரிஷாவின் பாடல் காட்சியோடு ஆரம்பமாகி, பிரச்னையை முதலிலேயே ஆரம்பித்து விடுகிறார். த்ரிஷாவின் நடிப்பும், பாவனையும் நன்றாகவே இருக்கின்றது, மற்ற விமர்சகர்களின் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன்..இவ்விசயத்தில்.

முதல் பாதியில், கமலின் வசனங்களும் சூப்பர்ப்! ‘நேர்மையானவங்களுக்கு திமிரு-தாங்க கேடயம்’ – மிக உண்மையான வார்த்தை. கமலின் matured thinking & seriousness was well exposed!கமலின் நடிப்பு – மிக இயல்பு. அவருக்கு சர்டிபிகேட் தேவையில்லை. இன்னொரு ஆச்சரியம்…’ட்ரிம்’ கமல்!!! அவரது வயதிற்கும், மாதவனுக்கும் கம்பேர் பண்ணும்போது… கமலின் மெனெக்கெடலை ஆச்சரியப் படத்தோணுகின்றது..!!! அவரது சோலோ நடனமும் சூப்பர்ப்! ‘நீலவானம்’ பாடலும், காட்சியமைப்பும் ..’வாவ்’ போட வைக்கிறது! நீண்ட நாட்களுக்கும் பிறகு, கமலின் குரலில் ரசிக்கும்படியாய் ஒரு பாடல்….


செகண்ட் …ஃபுல் ஸ்கோர்.. சங்கீதாவிற்குதான்!. அவரது சொந்தக்குரலா? Well carried! Good show!

மாதவன்தான் படத்தின் முதுகெலும்பு.. ஆனால், சில சமயங்களில் சறுக்குகிறார். கமலின் குரலில் இருக்கின்ற சீரியஸ்நெஸ், மாதவன் உச்சரிப்பில் இல்லாமல் போகிறது..சிற்சில இடங்களில்! இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாம்! கிளைமாக்ஸ் காட்சிகளில், கூட இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம்.
காமிராவும், லோகேஷன்களும், கப்பலும் படத்தின் இன்னொரு சிறப்பு. இசை- துணைநிற்கிறது, ஆனால், பெரிதாய்ச் சொல்ல முடியாது.
முதல் பாதி – மிக நன்று. இரண்டாம் பாதி – கமர்சியலுக்காக, முதல் பாதியின் சீரியஸ்நெஸ்ஸைத் தொலைத்து, காமெடி டிராக்கிற்குத் தாவுவது கொஞ்சம் ஏமாற்றம்தான்…
மொத்தத்தில்….’Kind of feel good’ movie for the Holiday!

11 comments:

பதிவுலகில் பாபு said...

ரொம்ப நல்ல விமர்சனங்க..

படம் பார்க்கும்போது என்னோட ஃபீலும் இதேமாதிரிதான் இருந்தது..

மனக்குதிரை said...

இப்படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் பற்றி நண்பர் பாலாவின் கருத்து:

"குத்து பாட்டு, பஞ்ச் டயலாக், அடி வாங்கும் காமெடி, இரட்டை அர்த்தம் என்று வந்து கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு நடுவில், நேர்மையாக, எந்த வித அபத்தமும் இல்லாமல், சந்தர்பங்களை hero - heroine -ஆகா வைத்து, அழகான ஒரு romance கலந்த நகைச்சுவையான படத்தை இப்படி ஒரு மொக்கையான பதிவின் மூலம் குறை சொல்லி உங்கள் ரசனையை நீங்களே குறைதுக்கொள்ளதீர்கள்.. "

இக்கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்..

Mohan said...

Nice review

rasanai said...

ithu than unmaiyana paagu paadu illatha vimarsanam,good job

மனக்குதிரை said...

நன்றி பாபு!

மனக்குதிரை said...

நன்றி மோகன்.

மனக்குதிரை said...

ரசனைக்குரிய நண்பரே..தங்களின் கருத்துக்கு நன்றி.

செல்வ கருப்பையா said...

//"குத்து பாட்டு, பஞ்ச் டயலாக், அடி வாங்கும் காமெடி, இரட்டை அர்த்தம் என்று வந்து கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு நடுவில், நேர்மையாக, எந்த வித அபத்தமும் இல்லாமல், சந்தர்பங்களை hero - heroine -ஆகா வைத்து, அழகான ஒரு romance கலந்த நகைச்சுவையான படத்தை இப்படி ஒரு மொக்கையான பதிவின் மூலம் குறை சொல்லி உங்கள் ரசனையை நீங்களே குறைதுக்கொள்ளதீர்கள்.. "//
Well said.

philosophy prabhakaran said...

உங்களுடைய மனக்குதிரை நல்ல இருக்கு... அதுசரி, followers widget எங்கே...

மனக்குதிரை said...

நன்றி செல்வ கருப்பையா அவர்களே! பாலா சார் கரெக்டா சொல்லியிருக்கிறார்!

மனக்குதிரை said...

ஃபிலாசபி..பிராபகர் அவர்களே..உங்கள் வேண்டுகோள் நிறைவேறப்பட்டுவிட்டது..

Post a Comment