Tuesday, December 28, 2010

“மன்மதன் அம்பு” – Good to See!

கமல் படம்….ரவிக்குமார் டைரக்ஷன்…காதல் களம்… வாவ்! என்ற ரொமாண்டிக் எதிர்பார்ப்புகளோடு பார்க்க வராதீர்கள்…‘காதலின் நடுவே சந்தேகம் வந்தால்’ – வேவு பார்த்தால்.. விளைகின்ற விளைவுதான் ‘மன்மதன் அம்பு’


கமல் காதலைத்தாண்டி எப்போதோ வந்தாயிற்று.. இன்னமும் அவரைக் காதல் இளவரசனாக பார்க்க அவருக்கும் விருப்பம் இருக்காது, பார்ப்பவர்களுக்கும் கூட. அதை உணர்ந்தே அவரது கதாபாத்திரமும் சித்தரிக்கப் பட்டு இருக்கிறது. So, cut that expectation and watch the movie, you like it!


படத்தின் முதல் பாகம் நன்றாகவே இருக்கிறது. சூர்யா-த்ரிஷாவின் பாடல் காட்சியோடு ஆரம்பமாகி, பிரச்னையை முதலிலேயே ஆரம்பித்து விடுகிறார். த்ரிஷாவின் நடிப்பும், பாவனையும் நன்றாகவே இருக்கின்றது, மற்ற விமர்சகர்களின் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன்..இவ்விசயத்தில்.

முதல் பாதியில், கமலின் வசனங்களும் சூப்பர்ப்! ‘நேர்மையானவங்களுக்கு திமிரு-தாங்க கேடயம்’ – மிக உண்மையான வார்த்தை. கமலின் matured thinking & seriousness was well exposed!கமலின் நடிப்பு – மிக இயல்பு. அவருக்கு சர்டிபிகேட் தேவையில்லை. இன்னொரு ஆச்சரியம்…’ட்ரிம்’ கமல்!!! அவரது வயதிற்கும், மாதவனுக்கும் கம்பேர் பண்ணும்போது… கமலின் மெனெக்கெடலை ஆச்சரியப் படத்தோணுகின்றது..!!! அவரது சோலோ நடனமும் சூப்பர்ப்! ‘நீலவானம்’ பாடலும், காட்சியமைப்பும் ..’வாவ்’ போட வைக்கிறது! நீண்ட நாட்களுக்கும் பிறகு, கமலின் குரலில் ரசிக்கும்படியாய் ஒரு பாடல்….


செகண்ட் …ஃபுல் ஸ்கோர்.. சங்கீதாவிற்குதான்!. அவரது சொந்தக்குரலா? Well carried! Good show!

மாதவன்தான் படத்தின் முதுகெலும்பு.. ஆனால், சில சமயங்களில் சறுக்குகிறார். கமலின் குரலில் இருக்கின்ற சீரியஸ்நெஸ், மாதவன் உச்சரிப்பில் இல்லாமல் போகிறது..சிற்சில இடங்களில்! இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாம்! கிளைமாக்ஸ் காட்சிகளில், கூட இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம்.
காமிராவும், லோகேஷன்களும், கப்பலும் படத்தின் இன்னொரு சிறப்பு. இசை- துணைநிற்கிறது, ஆனால், பெரிதாய்ச் சொல்ல முடியாது.
முதல் பாதி – மிக நன்று. இரண்டாம் பாதி – கமர்சியலுக்காக, முதல் பாதியின் சீரியஸ்நெஸ்ஸைத் தொலைத்து, காமெடி டிராக்கிற்குத் தாவுவது கொஞ்சம் ஏமாற்றம்தான்…
மொத்தத்தில்….’Kind of feel good’ movie for the Holiday!

Wednesday, October 27, 2010

இதப் படிங்க முதல்ல.. CNN Hero

நண்பர்களே..

CNN-ல் சில நிஜ வாழ்க்கை ஹீரோக்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதப் படிச்சுட்டு உங்களுக்குப் பிடிச்சிருந்தா ஓட்டுப் போடுங்க..

நவம்பர் 18க்குள் ஓட்டுப்போட வேண்டும்..

மனிதம் வளர்ப்போம்..

----------------------------------------------------------------------

 Narayanan Krishnan, all of 29 years old now, does what he was professionally trained to do as a chef. Feed people.

Only Krishnan does not do this in the swanky confines of a 5-star hotel. Every day, he wakes up at 4 am, cooks a simple hot meal and then, along with his team, loads it in a van and travels about 200 km feeding the homeless in Madurai, Tamil Nadu.


Krishnan feeds, often with his hands, almost 400 destitute people every day.And for those who need it, he provides a free haircut too.

According to CNN, eight years ago, this award-winning chef with a five-star hotel chain was all set to go to Switzerland for a high-profile posting. On a visit to a Madurai temple, he came across a homeless, old man eating his own human waste. That stark sight changed Krishnan's life.


Much to the dismay of his parents, CNN says, Krishnan abandoned his career plans and decided to spend his life and his professional training in looking after those who could not care for themselves. He has provided more than 1.2 million hot meals through his nonprofit organisation Akshaya Trust, and now hopes to extend this to shelter for the homeless too.

Krishnan is the only Indian in a list of 10 heroes that CNN has picked worldwide to honour. One of them will be chosen CNN Hero of the Year, selected by the public through an online poll. If many Indians get together
to vote for this inspiring man, he can win by a long mile.


If Krishnan wins he will get $100,000 in addition to the $25,000 that he gets for being shortlisted for the Top 10. Akshaya Trust needs all the monetary support it can get to build on Krishnan's dream. Let's help him get there.


http://heroes.cnn.com/vote.aspx Vote for Krishnan here. The poll continues through November 18 at 6 a.m. ET.

Saturday, October 23, 2010

எந்திரன் தராத நிம்மதி!?

---Thanks to Tamilcinema.com

 http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/october/121010.asp

எந்திரனுக்கு முன்பே துவங்கப்பட்டு எந்திரனுக்கு பிறகும் இழுபறியில் கிடந்த படம் சுல்தான் தி வாரியர். என்னென்னவோ நினைத்து படத் தயாரிப்பில் இறங்கிய சவுந்தர்யா ரஜினி, இப்படத்தின் மூலம் கற்றுக் கொண்ட பாடம் வாழ்நாள் முழுக்க தாக்குப்பிடிக்கிற அனுபவம்! அவரது திருமணத்திற்கு பிறகு சுல்தானின் போக்கில் திடீர் முன்னேற்றம்.
இப்படத்தை ஜெமினி லேப் மொத்தமாக வாங்கியிருக்கிறது. படத்தின் இயக்குனரான சவுந்தர்யாவை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.ரவிக்குமாரை இயக்க வைக்கவும் முடிவெடுத்திருக்கிறது இந்நிறுவனம். ரஜினி ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தப் போகும் இந்த மாற்றங்கள்தான் இன்டஸ்ட்ரியின் பரபரப்பு செய்தி.இதுவரை எடுக்கப்பட்ட அனிமேஷன்களை பயன்படுத்திக் கொள்வதுடன், ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரிஜனல் ரஜினியையும் உள்ளே நுழைக்கப் போகிறாராம் கே.எஸ்.ரவிக்குமார். இதற்காக இருபது நாட்கள் கால்ஷீட் கொடுக்க சம்மதித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இமயத்திலிருந்து சென்னைக்கு திரும்பியதும் படப்பிடிப்பு துவங்குகிறது.ரவிக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டதால் படத்தில் கரம் மசாலாவுக்கு பஞ்சமே இருக்காது. எந்திரன் தராத நிம்மதியை கூட ரசிகர்களுக்கு இந்த படம் ஏற்படுத்தி தரலாம்!

Saturday, October 16, 2010

எந்திரன் - திரைவிமர்சனம்

எந்திரன் - இந்தியச் சினிமாவின் உலகத்தரத்திற்கான முயற்சி.. உண்மைதான்..நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள்.. ஆனால், மனதை நிறைக்கிறாதா என்றால்....!!!?

ஷங்கரின் பிரம்மாண்டம்...ரஜினியின் ரோபோ ராஜ்ஜியம்.. சன் டிவியின் விளம்பர யுக்தி..என எல்லா விசயங்களும் ஏகத்துக்கு எதிர்பார்ப்பினைக் கிளப்பிவிட்டது. சத்யம் தியேட்டரில்தான் பார்க்க வேண்டும், என்று காத்திருந்து நேற்றுதான் பார்க்க முடிந்தது.

படம் விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது. ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.
ஆனால், திரும்பத்திரும்ப பார்க்கிற மாதிரி பிரமிப்பும் இல்லை சுவாரஸ்யமும் குறைவுதான்.

சுஜாதாவின் கதையில் இருந்த ஈர்ப்பினை, 'கிராபிக்ஸ்' யை பிரதானப்படுத்தி நகர்கின்ற திரைக்கதை, 'டைல்யூட்' பண்ணிவிடுகின்றது.

'ரோபோ' ரஜினியின் வசீகரம், வசீகரன் ரஜினியிடம் முழு ஈடுபாட்டினைக் பார்க்க முடியவில்லை.  ஏனோதானோ என்றிருக்கிறார். தவிரவும் வசீகரன் மேக்-அப்-ம் 'லாங்-ஷாட்'டில் மட்டுமே நன்றாக இருக்கிறது.

ரோபோ ரஜினிக்கு உணர்வுகள் கற்பிக்கப்பட்டு, 'கோபம்' வெளிப்படுகின்ற சீன்..நன்றாய் இருக்கிறது.

ஐஸ்வர்யாராய் பற்றி எல்லா விமர்சனங்களும்  தேவதையாய்  வர்ணித்திருந்தார்கள், ஆனால்,  முதிர் தேவதை.  ரஜினியைத் தேடி அலுவலகத்தின் வெளியே கருணாஸ்/சந்தானமிடம் கோபப்படும் இடத்தில், 'எதற்கு ஐஸ்'-ஐப் போட்டார்கள் என்ற கேள்வி வருகிறது. பாடல் காட்சிகளில் நன்றாகவே இருக்கிறார், ரஜினியைவிட இவரைத்தான் ரசிக்கிறார்கள்.

'பன்னிக்குட்டி' வில்லன் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, பயந்து ஓடி வருகிற ரஜினியையும்  , மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க, ஐஸ்-ன் லோ நெக்-க்குக்கு ஃபோகஸ் ஆகிற கேமிராவையும்.... ஸாரி ஷங்கர்..ரசிக்க முடியவில்லை.

கிளைமாக்ஸ் - நீளம்..குறைத்திருக்கலாமோ?

எளிதாய் யூகிக்க முடிகிறமாதிரி நகர்கிற திரைக்கதை, நம்மை ரிலாக்ஸாக்கி, ரோபோவினி சீரியஸ் விசயங்களை பிரம்மிக்கச் செய்யத் தவறுகிறது. ஒளிப்பதிவு-ஒலிப்பதிவு-கலை மிகப் பாராட்டுக்குறியவர்கள்.

அது சரி..வல்லமை மிக்க 'ரோபோ' சயின்டிஸ்ட், 'எலக்ட்ரானிக்' குப்பைகளை, எலக்ட்ரானிக்ஸ் முறைப்படி டிஸ்போஸ் பண்ண மாட்டாரா? சாதாரண குப்பைபோல, பெருங்குடி கழிவிடமா போகச் செய்வார்?

'வில்லனும்' அந்த எந்திரத்தைத் தேடி ஒட்ட வைத்து, அதுக்கு உயிர் கொடுப்பாராம், சாப்ட்வேர் ரகஸ்யத்தைத் தேடாமல், எந்திரத்தை ரிப்பேர் பண்ணினால், சரியாகிவிடுகின்ற மாதிரி காட்டியிருப்பது, சயின்ஸ் பிக்சன் மசாலாவோ?

ரஜினி என்ற மாஸ் இல்லை என்றால், இவ்வளவு மெனக்கெடலும் வீணாகிப் போகியிருக்கலாம். 'சிவாஜி' - ரஜினிக்கு ஷங்கர் எடுத்த படம் என்றால், 'ரோபோ' - ஷங்கருக்கு ரஜினி நடித்த படம்.

விளம்பர எதிர்பார்ப்புகளை மறந்து பார்த்தால், படம் ஓகே.