Thursday, April 14, 2011

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! April-14

சித்திரை மாதம்
தமிழின் முதல் மாதம்!

தமிழ் அன்னையின்
இப் புதிய திங்களின்
புதிய கர வருடத்தின்
நாட்கள் அனைத்தும்

தமிழ்க் கடவுள்

முருகவேளின்
ஆசியோடு

மகிழ்வாய்
மலர்வாய்
இனிதாய்

இருந்திட


எல்லா அன்பிற்கும்
நட்பிற்கும்

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக!

Wow! தமிழகம் Election 2011! வாக்களனுக்கு நன்றி!

தமிழக மக்கள் விழித்துக் கொண்டார்களா! என்ன ஒரு சாதனை! 75.21!

தேர்தல் கமிஷனுக்கு நிச்சயமாய் ஒரு 'ஓ' அல்ல பல 'ஓஓஓஓ' போடவேண்டும்.

பிடிபட்ட கோடிகள்! எத்தனைக் கோடிப் பணம்...எங்கேயிருந்தது இவ்வளவு பணம்! இவ்வளவு 'investment' பண்ணி எவ்வளவு எடுக்க இந்த முயற்சி..என ஒவ்வொரு வாக்காளனுக்குள்ளும் இந்தக் கேள்வி எழுந்திருக்க வேண்டும்!

1967-க்குப் பிறகு..Distinction வாங்கியிருக்கிறது தமிழகம்!

இதற்குக் காரணங்கள் பல இருக்கலாம்..

  • வாக்காளனுக்குக் கொடுக்கப்பட்ட பணம்
  • அரசியல் கட்களின் ஊழல்
  • தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கில் பிடிபட்ட பணம்
  • திமுக குடும்ப அரசியலுக்கான எதிர்ப்பு
  • இலங்கைத் தமிழனுக்கு இழைக்கப்பட்ட துரோகம்
  • இரு கட்சிகளின் இலவசத் திட்டங்கள்
  • மாற்றம் தேடும் மக்கள் மனசு
எதுவாக இருப்பினும்...வாக்காளனுக்கும் நன்றி சேர்க்கப் படவேண்டும்.. இவ்வளவு வெப்பம் நிறைந்த நாளிலும், காத்திருந்து வாக்கினைச் சேர்ப்பித்தமைக்கு!

நிறைய வாக்குச் சாவடிகளில், 'Booth Slip'' இல்லாத வாக்களர்கள், வாக்களிக்கத் திணறினார்கள்...நான் உட்பட..!

திமுக பூத்திலும் சரி...அதிமுக பூத்திலும் சரி..தேடியாயிற்று..இருவருமே கையை விரிக்கிறார்கள்..உங்க பெயர் இல்லை என்று..!

சரி...வாக்களிக்கின்ற இடத்திலேயே விசாரிக்கலாம் என்றால்..எந்தப் பள்ளியில் எங்கள் வார்டு வருகிறது என்று குழப்பம்..! கிட்டே இருந்த இரண்டு பள்ளியில் தேடினால், அதையும் கண்டு பிடிக்க முடியவில்லை..!

சரிதான் ..நாமே கண்டுபிடிக்க வேண்டியதுதான் என்று கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத் தேடலுக்குப்  பிறகு,  வீட்டுக்கு  வந்து,  தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் தேடி,  என் வீட்டு விலாசத்திற்கான பள்ளியைத் தேடி கண்டுபிடித்தேன்.

அதற்குப் பிறகு, அந்தப் பள்ளிக்குச் சென்றால்.. 12.00 மணி மொட்டை வெயில்.. நீண்ட வரிசை வேறு!

ஒரே பள்ளியில்..பல்வேறு வார்டுகளுக்குத் தனித்தனி வரிசை..! நம்ம வார்டு எண்ணைப் பார்த்து, வரிசையில் நிற்கலாம் என்று பக்கத்தில் இருந்த காவல்காரரிடம் விசாரிக்கையில்.. 'நீங்க லக்கி சார்..உங்க வார்டுக்கு கூட்டமே இல்லை..போயி உடனே போடுங்க' என்றார்.

எப்படி இருக்கும்.. எங்க வார்டு மக்களும் என்னை மாதிரி ஸ்கூல தேடிக் கண்டுபிடுச்சு வர இன்னும் நேரமாகும்..னு நினைச்சுகிட்டே வார்டு கிட்ட போனேன்! அவர் சொன்னது சரிதான்..!  கிட்டத்தட்ட இருநூறு, முன்னூறூ மக்கள் காத்திட்டுருக்கிற இடத்துல, எங்க வார்டு வரிசையில மூணு பேருதான் முன்னால..!

அங்கேயிருந்த அதிகாரி, 'பூத் ஸ்லிப்' எங்க சார்?'னு கேட்க,  அதத் கேட்டுத்தான் ரெண்டுமணிநேரம் போயிடுச்சு சார்.. வாக்காளர் ஐடியைப் பாத்து,  இங்க வந்திருக்கேன் சார்'னேன்.  நம்பரைப் பார்த்து முப்ப்பதி விநாடி தேடினார்..'இருக்கு சார்'னு சொல்லி,  அவரது ரிஜிஸ்டரில் 'டிக்' பண்ணி அனுப்பினார். 'அப்பாடா' ..போட்டுடலாம்னு நிம்மதி வந்தது.!

கிட்டத்தட்ட இந்த வகையிலெ, பூத்-ஐக் கண்டுபிடிக்க முடியாமல் போன வாக்காளர் எண்ணிக்கை, இரண்டொரு சதவீதம் இருக்கலாம்!

கட்சிகளும், தேர்தல் அதிகாரிகளும், இந்தவகைக் குறைகளை, கணிணி முறையில் களைய முற்படலாம். Manual தேடலை விட, கணிணியில் தேடுவது சுலபம்.. வாக்குச் சீட்டு இல்லையென்றாலும், வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்கள் எந்த பள்ளிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறை எளிதாயிருக்கும்.

வாக்களித்து விட்டு வரும் வழியில், இரண்டு பெண்கள் பேசிக்கொண்டது:

'நேத்து ஆயிர(ம்) ரூபா தந்தாய்ங்களே..வாங்குனியா..?'

'யாரு குடுத்தா? எனக்குத் தெரியாதேக்கா..?

'குமாருதான் கொடுத்தான்..அப்புறம் போயிக் கேளு, தருவான்'

எவ்வளவு கெடுபிடி இருந்தாலும், வழிகள் பல இருக்கத்தான் செய்கிறது போலிருக்கின்றது!

காசுக்கு வோட்டுப் போடுவது, குற்றம் என்ற உணர்வு மக்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களைச் சொல்லி என்ன பயன், அவர்களைப் பொறுத்தவரையில், அந்தப் பணம் ஒரிரு  வாரத்திற்காவது தாங்கும்..!

நிரந்தரமாய் வருவாய்க்கு வழிவகை செய்ய எந்தக் கட்சிகளும், திட்டங்களைத் தருவதில்லையே! அண்டியிருக்கத்தானே செய்கின்றன!

தூய உள்ளத்தோடு..மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற வேண்டும் என எண்ணுகின்ற தலைவன்..இப்போதைய நிகழ்வில்...இதுவரை கண்ணில் தெரியவில்லை..!ம்ம்ம்..அதுவரை எரியிற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி'ங்கிற கதைதான்!

காத்திருப்போம்.. நல்ல விடியலுக்கு!

வாழ்க ஜனநாயகம்! வாழ்க தேர்தல் கமிஷன்! வாழ்க தமிழக வாக்காளர்கள்!