Thursday, January 31, 2013

கருத்துச் சுதந்திரமும், கமலும்



எங்கு நோக்கினும் விஸ்வரூபம்....

விஸ்வரூபம் சொல்லுக்கு ஏற்ப...பிரச்னைகளும் பூதாகரமாகி...சுமூகமாய் முடிந்திருக்கிறது...(தற்சமயமா,,,அல்லது வேறு ஏதும் புதிய பிரச்னை வருமா)...

ஆனால், பிரச்னைகள் மளமள என்று வளர்ந்த போது...கடுப்பாய்த்தானிருந்தது...

கமலின் பேட்டியும்...கலைஞரின் தொடர் சப்போர்ட்டும், விஜயகாந்தின் அறிக்கையும்...மக்களின் எழுச்சியும்...அறிக்கையாய் அரசுக்குப் போனதாலா...

காரணமில்லாமல் கமல் தாக்கப்படுகையில், இரசிகர்கள் மட்டுமல்ல பொது மக்களே வருத்தப்பட்டதாலா..

 தமிழகம் தாண்டி, வட இந்தியாவிலும், எல்லா தொலைக்காட்சியிலும், மக்களும், நடிகர்களும், கருத்து கந்தசாமிகளும், அலசிய அலசலாலா..

கூடிய சீக்கிரமே வரஇருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலும், 40 டிக்-கடிக்க ஆபத்து வருமோ என்ற ஆதங்கமா?

எது இறங்கி வரச் செய்தது..தெரியவில்லை...

ஆனால், தவிர்த்திருக்க வேண்டிய ஒன்றை, வளர்த்து விட்டு, எம்ஜியாரின் கட்சி, இப்படிச் செய்திருக்கக் கூடாது என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிட்டார்...முதல்வர்..

தமிழகத்தில் கமலும், ரஜினியும், சூரியனும் சந்திரனும் போல...அவர்கள் அரசியல் கட்சி நடத்தாவிட்டாலும்,  தமிழக மக்களின் வாழ்க்கையில் இணைந்திருப்பவர்கள்... அவர்களிருவரை எங்கு அடித்தாலும், எப்படி அடித்தாலும், தமிழன் மனம் வருந்தித்தான் போவான்...!

வெறுப்புக்கு வெறுப்பு மாற்றாகது...அன்பே மாற்று....!

இது எல்லோருக்கும்...எல்லா மதத்தினர்க்கும் எல்லா நேரமும் பொருந்தும்!

இனிவரும் நாள் இனிய நாளாய் இருக்கட்டும்!










2 comments:

Anonymous said...

வட இந்தியா மட்டுமா, கனடா, அமெரிக்காவில் கூட செய்திகள் வந்துவிட்டன. நாத்திக இயக்குநரின் திரில்லர் படத்துக்கு முஸ்லிம் இயக்கங்கள் எதிர்ப்பு என ..

சசி ராஜா said...

முதல்நாள் இந்தி கலெக்‌ஷன் 1.9 கோடி என்று தகவல்..

இன்று சமரசம் நடந்தாகச் செய்தி. செய்தியாளர் சந்திப்பில் களையிழந்திருந்தது கமலின் முகம்..கலைஞனின் தோல்வி..பவர் ஸ்டார்களின் வெற்றி..வேறு என்ன சொல்ல..

Post a Comment