Saturday, January 1, 2011

புதிய வருடம்...புதிய ஒளி

2010 - ஓடிப்போய்விட்டது...
ஊழலும்..உலைச்சலுமாய்!
கலைந்த கனவுகளும்
கற்பனைகளுமாய்!

உள்ளூர் விளையாட்டாய்
இருந்தாலும் சரி..
உலக அரங்கினுக்கான
விளையாட்டாய்
இருந்தாலும் சரி...
எப்படியெல்லாம் முடியுமோ..
அப்படியெல்லாம் சுருட்டப்பட்டது!

தனிமனித ஒழுக்கங்களும்
களவுகளும், கடத்தல்களும்
குழந்தைக் கடத்தல்களும்
கண்முன்னே நடந்தபோதும்

ஈழக்கனவுகள் சிதைந்ததும்
மருத்துவ உதவிகள்
மறுக்கப்பட்ட போதும்

மக்கள் இயந்திரம் மட்டும்
மனமொத்தோ..மறதியை
மனதில் சுமந்து கொண்டோ
இயங்கிக் கொண்டே...

வரவேற்கிறது..புதிய ஆண்டை...
புதிய நம்பிக்கையில்..
புதிய ஒளியினை
எதிர்நோக்கி!

நம்பிக்கையே வாழ்க்கை!
தும்பிக்கையோன் துணையுடன்
2011 புதுவருடம் எல்லா வளமும்,
நலமும் எல்லோர்க்கும்
சேர்த்திட..
வணங்கி வாழ்த்துவோம்!

புது வருட வாழ்த்துக்கள்!

5 comments:

venkat said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

goma said...

மனக்குதிரை நாலுகால் பாய்ச்சலில் பறக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

சசி ராஜா said...

நன்றி வெங்கட்

சசி ராஜா said...

நன்றி கோமா, இப்ப ரெண்டுகால் பாய்ச்சல்தான் போறேன்றீங்களா? வேகம் கூட்டப் பார்க்கிறேன்.

நானானி said...

மனக்குதிரைதானே....அது எத்தனை கால் பாய்ச்சலிலும் போகலாமே!!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Post a Comment