Sunday, March 20, 2011

தேர்தல் களம் - 2011

உனக்கும் குடும்பம்
எனக்கும் குடும்பம்

நீயும் பிழைக்கணும்
நானும் பிழைக்கணும்

நீயோ ஓட்டாண்டி
நானோ அதிபதி

ஓட்டாண்டி ஒண்டியிருக்கணும்
அதிபதி அதிகாரத்தோடிருக்கணும்

ஒண்டியிருக்க இலவசங்கள்
அதிகாரத்தோடிருக்க பதவி

சிந்திக்க மறந்திடு!
செயல்திறன் இழந்திடு!

தமிழனாய் இருந்திடு!
தலைக்கனம் இல்லாதிரு! - ஆமாம்...
'மொட்டைக்கு' இடம் கொடுத்து
வாக்குகளை எனக்கிடு!

தமிழக அரசியல் தேர்தல் - 2011

No comments:

Post a Comment