Saturday, October 23, 2010

எந்திரன் தராத நிம்மதி!?

---Thanks to Tamilcinema.com

 http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/october/121010.asp

எந்திரனுக்கு முன்பே துவங்கப்பட்டு எந்திரனுக்கு பிறகும் இழுபறியில் கிடந்த படம் சுல்தான் தி வாரியர். என்னென்னவோ நினைத்து படத் தயாரிப்பில் இறங்கிய சவுந்தர்யா ரஜினி, இப்படத்தின் மூலம் கற்றுக் கொண்ட பாடம் வாழ்நாள் முழுக்க தாக்குப்பிடிக்கிற அனுபவம்! அவரது திருமணத்திற்கு பிறகு சுல்தானின் போக்கில் திடீர் முன்னேற்றம்.




இப்படத்தை ஜெமினி லேப் மொத்தமாக வாங்கியிருக்கிறது. படத்தின் இயக்குனரான சவுந்தர்யாவை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.ரவிக்குமாரை இயக்க வைக்கவும் முடிவெடுத்திருக்கிறது இந்நிறுவனம். ரஜினி ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தப் போகும் இந்த மாற்றங்கள்தான் இன்டஸ்ட்ரியின் பரபரப்பு செய்தி.



இதுவரை எடுக்கப்பட்ட அனிமேஷன்களை பயன்படுத்திக் கொள்வதுடன், ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரிஜனல் ரஜினியையும் உள்ளே நுழைக்கப் போகிறாராம் கே.எஸ்.ரவிக்குமார். இதற்காக இருபது நாட்கள் கால்ஷீட் கொடுக்க சம்மதித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இமயத்திலிருந்து சென்னைக்கு திரும்பியதும் படப்பிடிப்பு துவங்குகிறது.



ரவிக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டதால் படத்தில் கரம் மசாலாவுக்கு பஞ்சமே இருக்காது. எந்திரன் தராத நிம்மதியை கூட ரசிகர்களுக்கு இந்த படம் ஏற்படுத்தி தரலாம்!

No comments:

Post a Comment