எந்திரன் - இந்தியச் சினிமாவின் உலகத்தரத்திற்கான முயற்சி.. உண்மைதான்..நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள்.. ஆனால், மனதை நிறைக்கிறாதா என்றால்....!!!?
ஷங்கரின் பிரம்மாண்டம்...ரஜினியின் ரோபோ ராஜ்ஜியம்.. சன் டிவியின் விளம்பர யுக்தி..என எல்லா விசயங்களும் ஏகத்துக்கு எதிர்பார்ப்பினைக் கிளப்பிவிட்டது. சத்யம் தியேட்டரில்தான் பார்க்க வேண்டும், என்று காத்திருந்து நேற்றுதான் பார்க்க முடிந்தது.
படம் விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது. ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.
ஆனால், திரும்பத்திரும்ப பார்க்கிற மாதிரி பிரமிப்பும் இல்லை சுவாரஸ்யமும் குறைவுதான்.
சுஜாதாவின் கதையில் இருந்த ஈர்ப்பினை, 'கிராபிக்ஸ்' யை பிரதானப்படுத்தி நகர்கின்ற திரைக்கதை, 'டைல்யூட்' பண்ணிவிடுகின்றது.
'ரோபோ' ரஜினியின் வசீகரம், வசீகரன் ரஜினியிடம் முழு ஈடுபாட்டினைக் பார்க்க முடியவில்லை. ஏனோதானோ என்றிருக்கிறார். தவிரவும் வசீகரன் மேக்-அப்-ம் 'லாங்-ஷாட்'டில் மட்டுமே நன்றாக இருக்கிறது.
ரோபோ ரஜினிக்கு உணர்வுகள் கற்பிக்கப்பட்டு, 'கோபம்' வெளிப்படுகின்ற சீன்..நன்றாய் இருக்கிறது.
ஐஸ்வர்யாராய் பற்றி எல்லா விமர்சனங்களும் தேவதையாய் வர்ணித்திருந்தார்கள், ஆனால், முதிர் தேவதை. ரஜினியைத் தேடி அலுவலகத்தின் வெளியே கருணாஸ்/சந்தானமிடம் கோபப்படும் இடத்தில், 'எதற்கு ஐஸ்'-ஐப் போட்டார்கள் என்ற கேள்வி வருகிறது. பாடல் காட்சிகளில் நன்றாகவே இருக்கிறார், ரஜினியைவிட இவரைத்தான் ரசிக்கிறார்கள்.
'பன்னிக்குட்டி' வில்லன் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, பயந்து ஓடி வருகிற ரஜினியையும் , மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க, ஐஸ்-ன் லோ நெக்-க்குக்கு ஃபோகஸ் ஆகிற கேமிராவையும்.... ஸாரி ஷங்கர்..ரசிக்க முடியவில்லை.
கிளைமாக்ஸ் - நீளம்..குறைத்திருக்கலாமோ?
எளிதாய் யூகிக்க முடிகிறமாதிரி நகர்கிற திரைக்கதை, நம்மை ரிலாக்ஸாக்கி, ரோபோவினி சீரியஸ் விசயங்களை பிரம்மிக்கச் செய்யத் தவறுகிறது. ஒளிப்பதிவு-ஒலிப்பதிவு-கலை மிகப் பாராட்டுக்குறியவர்கள்.
அது சரி..வல்லமை மிக்க 'ரோபோ' சயின்டிஸ்ட், 'எலக்ட்ரானிக்' குப்பைகளை, எலக்ட்ரானிக்ஸ் முறைப்படி டிஸ்போஸ் பண்ண மாட்டாரா? சாதாரண குப்பைபோல, பெருங்குடி கழிவிடமா போகச் செய்வார்?
'வில்லனும்' அந்த எந்திரத்தைத் தேடி ஒட்ட வைத்து, அதுக்கு உயிர் கொடுப்பாராம், சாப்ட்வேர் ரகஸ்யத்தைத் தேடாமல், எந்திரத்தை ரிப்பேர் பண்ணினால், சரியாகிவிடுகின்ற மாதிரி காட்டியிருப்பது, சயின்ஸ் பிக்சன் மசாலாவோ?
ரஜினி என்ற மாஸ் இல்லை என்றால், இவ்வளவு மெனக்கெடலும் வீணாகிப் போகியிருக்கலாம். 'சிவாஜி' - ரஜினிக்கு ஷங்கர் எடுத்த படம் என்றால், 'ரோபோ' - ஷங்கருக்கு ரஜினி நடித்த படம்.
விளம்பர எதிர்பார்ப்புகளை மறந்து பார்த்தால், படம் ஓகே.
No comments:
Post a Comment