Tuesday, May 26, 2009

சூழலும், எண்ணமும்

சூழலின் நிகழ்வுகள்
எண்ணங்களை எழுதத் தூண்டினாலும்,
எண்ணங்களின் வடிவங்கள்
நிகழ்வுகளை நிர்வாணிக்க
விழையாது!

புத்தியின் கட்டுப்பாட்டிலேயே
எண்ணங்களின் வடிவங்கள்
அரங்கேறும்!

நிறைய தருணங்களில்
அதுவே நிறைவைத்
தருவதாயும் இருக்கும்!

ஆனாலும் உள்மனசு
அவ்வப்போது அதன்
ஆட்டங்களை ஆடிக்கொண்டுதானிருக்கும்!

மனசுக்கும், புத்திக்கும்
நடுவே தடுமாறுகின்ற
எண்ணங்களின் சிதறல்கள்
எவ்வடிவம் பெறும்.. யாரறிவார்?

2 comments:

நானானி said...

//புத்தியின் கட்டுப்பாட்டிலேயே
எண்ணங்களின் வடிவங்கள்
அரங்கேறும்!

நிறைய தருணங்களில்
அதுவே நிறைவைத்
தருவதாயும் இருக்கும்!//

மிகச் சரியாச் சொன்னீர்கள். யாராலும்(சமயத்தில் ஞானிகளால் கூட!)அடக்கமுடியாதது மனக்குதிரைதானே!

பதிவர் உலகத்துக்கு புது வரவா? வருக..வருக!!

சசி ராஜா said...

நன்றி அம்மா

Post a Comment